தமிழ்நாட்டின் வரலாறும் தமிழ் மக்களின் நாகரீகமும் உலகின் மிகப் பழமையானது. தற்கால இந்தியாவிலுள்ள தமிழ்நாடு
மண்டலம் வரலாற்று காலத்துக்கு முன்பே மக்கள் வாழும் உறைவிடமாக தொடர்ந்து வந்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டிற்கு பல்லவ அரசு காலத்தியிலிருந்துதான் வரலாறு உள்ளது. சேர, சோழ, பாண்டிய பேரரசுகள், பண்டைய பூர்வீக தமிழ் பேரரசுகளாக இருந்தன. இவர்களைத் தொடர்ந்து பல்லவர்கள் முக்கிய அரசாக இருந்தது. சோழர்கள் ஒன்பதாம் நூற்றாண்டில் பல்லவர்களையும், பாண்டியர்களையும் தோற்கடித்து, தங்களது பெரும் சக்தியாக எழுச்சியடைந்து கிட்டத்தட்ட தெற்கு தீபகற்பப் பகுதி முழுவதும் தங்கள் பேரரசை விரிவுபடுத்தினர்..
வடமேற்கு பகுதியிலிருந்து வந்த இஸ்லாமிய படைகளின் ஊடுருவல் காரணமாக இந்தியாவில் மற்ற பகுதியில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் தமிழ்நாட்டின் வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது. 14ம் நூற்றாண்டில் பண்டைய மூன்று பேரரசுகளின் வீழ்ச்சி காரணமாக தமிழ்நாடு விஜயநகரப் பேரரசின் ஒரு அங்கமாக மாறியது.
ஐரோப்பிய நாடுகளில் இருந்து போர்ச்சுக்கிசீயர்கள், டச்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் வணிகம் செய்ய வந்தனர். அவர்கள் கிழக்கிந்திய கம்பெனியை மசூலினிப்பட்டினம் என்ற இடத்தில் 1611ல் தொடங்கினார்கள். தென்னிந்தியாவின் பல பகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாகாணம் 18ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. இந்திய சுதந்திரத்திற்குப் பின் மொழியின் எல்லைகளை அடிப்படையாக கொண்டு தமிழ்நாடு மாநிலம் உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு வடக்கில் ஆந்திரா மற்றும் கர்நாடகமும், மேற்கில் கேரளாவும், கிழக்கில் வங்காள விரிகுடா மற்றும் தெற்கில் இந்திய பெருங்கடலும் எல்லையாக கொண்டுள்ளது.